For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவை வீழ்த்த சட்டமன்ற தேர்தலில் திமுக அணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடரும்

By Chakra
Google Oneindia Tamil News

திருச்சி: வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் நடந்த கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

IUML urges opposition to come under DMK alliance to defeat AIADMK

திமுக தலைமையிலான அணியில்...

பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும்.

இத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

வெள்ளச் சேதம்: தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல்...

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது.

மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்காள அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது.

இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திடாமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

15 அம்ச கோரிக்கை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இந்திய குடி மக்களின் தனித்தன்மைகளை பாதுகாத்தல், மதவெறி-பயங்கர வாதத்திற்கு பழியாகாமல் பாதுகாத்தல் , பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் சாசன 44வது பிரிவை ரத்து செய்யக் கோருதல், கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்துதல்,

தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுத்தளங்களில் வழிபாடு நடத்த கோருதல், சட்ட விரோ ஆக்கிரமிப்புகளிலிருந்து வஃக்பு சொத்துக்களை மீட்டு அதை ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்துதல், வட்டியில்லா வங்கி முறையை அமல்படுத்துதல்,

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு குறையாத பதவியில் முஸ்லிம்களை நியமித்தல், போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய பூரண மது விலக்கை அமல் படுத்துதல், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை,

மத்திய-மாநில அரசுகளால் நடத்தப்படும் அவரவர் தாய் மொழியில் எழுதிட அனுமதிக்க வேண்டுதல், அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினர் ஆணையங்கள், நிதி வளர்ச்சி வாரியங்கள் நிறுவிட வேண்டுதல், காஜிகளின் திருமண பதிவேடுகளுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தல், தேர்வு குழுக்களில் குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது இடம் பெறச் செய்தல் ஆகிய 15 அம்ச கோரிக்கை பிரகடனத்தை தமிழகம் முழுவதும் விளம்பர படுத்தவும், பரப்புரை செய்யவும் அனைத்து மாவட்ட ,பிரைமரி அமைப்புகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா:

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உதய தினத்தை உலக நாடுகள் பலவும் இந்திய அரசும், தமிழக அரசும் விடுமுறை நாளாக அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளன.இந்த ஆண்டு தமிழகத்தில் டிசம்பர் 23 அல்லது 24 ம் தேதி மீலாதுந் நபி தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்நந்நாளையொட்டி தமிழகத்தின் ஊர்கள் தோறும் சமூக விழாவாக நடத்துவதோடு, மருத்துவமனைகளுக்கு சென்று நேயாளிகளுக்கு உதவி புரிதல் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட சமூக நலக்காரியங்களில் ஈடுபடவும், இந்நாளையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்வதற்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும்இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும், இம் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The Indian Union Muslim League (IUML) will play an active role under DMK led front to ensure the defeat of CM Jayalalithaa led ADM in the 2016 Assembly elections, the party has said in the resolution passed in its State general body meeting held in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X