For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தை சூடு பறக்க வைக்கும் அந்த 2 பாடல்கள் இவைதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு களத்தின் சூடு குறையால் அனல் பறக்க இரு பாடல்கள் உதவி வருகின்றன. அதில் ஒன்று ஹிப்ஹாப் தமிழன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஆதி வெளியிட்ட ஆல்பம்.

Jallikattu ban in Tamil Nadu and the Songs

டக்கரு, டக்கரு என்று தொடங்கும் இந்த ஆல்பம் 2016 ஜூன் மாதம் யூடியூப்பை முத்தமிட்டது. இதுவரை 50 லட்சம் வியூஸ்களை தாண்டி கலக்கி வருகிறது. இது வெறும் பாடல் என்ற அளவில் மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பின்னணியிலுள்ள அரசியல், நாட்டு மாடுகள் ஒழிப்பு போன்றவற்றை குறும்பட பாணியில் விளக்கியிருப்பது சிறப்பு. இதற்காக களத்தில் உள்ளவர்களின் சிறு பேட்டி துணுக்குகளையும் இணைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு அரசியலை புரிந்து கொள்ள இந்த ஆல்பத்தை பார்ப்பது ஒரு எளிமையான வழியாக இருக்கும்.

மற்றொரு பாடல், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷால் வெளியிடப்பட்டது. கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தலைப்பிலான இந்த ஆல்பம், உணர்ச்சியை ஹைபீட்டில் ஏற்றி கால்களை ஆட்டம் போட செய்யும் வகையில் அடித்து துவைத்திருப்பார் ஜி.வி.பிரகாஷ்.

"கோடிபேருதான் இங்கு இருக்கிறோம் வாங்கி கட்டிக்க வந்திருக்க", "இது மஞ்சுவிரட்டுதாண்டா, நீ நெஞ்ச நிமித்தி வாடா..", "தடைகளை மீறி குறிச்சிட்டோம் தேதி" போன்ற வரிகளை உச்சஸ்தாபியில் பாடும்போது, உங்கள் நரம்புகளும் புடைப்பதை பார்ப்பீர்கள். ஜல்லிக்கட்டு பிரச்சினை உச்சத்தில் உள்ளபோது இந்த பாடல் வெளியிடப்பட்டது. அதர்குள்ளாக 7 லட்சம் வியூசை தொடப்போகிறது யூடியூப்பில்.

English summary
How music is being used to protest Jallikattu ban in Tamil Nadu, says this article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X