For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு கலவர விசாரணை… இன்னும் 6 மாதம் கால அவகாசம் தேவை.. கமிஷன் தலைவர் ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு கலவர விசாரணை நடத்தி முடிக்க இன்னும் 6 மாதங்கள் தேவைப்படும் என்று விசாரணைக் கமிஷனின் தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரணை நடத்தி முடிக்க 6 அல்லது 7 மாதம் ஆகும் என்று நீதிபதி ராஜேஷ்வரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மொத்தம் 1949 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நாள் ஒன்றுக்கு 5 பேர் என்ற அளவில் அழைத்து விசாரணை நடத்துகிறோம்.

Jallikattu commission needs six more months

மதுரையில் மட்டும் 996 பேரும், கோவையில் 51 பேரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்க இன்னும் 6ல் இருந்து 7 மாதங்கள் வரை பிடிக்கும். அடுத்தடுத்து, மதுரை, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று விசாரிக்க உள்ளோம்.

அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை இந்த விசாரணை கமிஷனுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 6 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று ராஜேஷ்வரன் கூறியுள்ளார்.

English summary
Jallikattu commission expects six more months, said retired judge Rajeshwaran in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X