For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டம்- போர்க்களமான தமிழகம் - live

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகமே போர்க்களமாக காட்சி தருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உச்சகட்ட போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.

-மாணவர்கள் போராட்டத்திற்கு மீனவர்கள் ஆதரவு

-நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்

-இலங்கை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

-விருதுநகர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நாளை வேலை நிறுத்தம்

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தம்

-அலங்காநல்லூரில் 4-வது நாள் இரவும் போராட்டம் நீடிப்பு

-மெரீனாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

-2 லட்சம் பேர் வரை மெரீனாவில் திரண்டுள்ளதாக தகவல்

-மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

-அரசுப் பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு விருதுநகரில் பள்ளிகள் விடுமுறை

-திருப்பூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

-தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சம் பேர் போராட்டம்

-தமிழகம் முழுவதும் 460 இடங்களில் போராட்டம்

-சென்னையில் 210; பிற மாவட்டங்களில் 250 இடங்களில் போராட்டம்

-மதுரையில் இருந்து புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

-மதுரை ரயில்வே சந்திப்பின் இருபுறமும் ரயில்கள் நிற்கிறன

-மதுரை வழியாக ரயில்கள் செல்ல முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர் போராட்டக்குழுவினர்

Jallikattu protests spread across Tamil Nadu

-திண்டுக்கல் ரயில் நிலையத்திலும் மறியல் போராட்டம்

-தென்மாவட்ட ரயில்கள் மதுரைக்கு வர முடியவில்லை

-தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

-சென்னையில் இருந்து வந்த வைகை ரயில் திண்டுக்கல்லுடன் ரத்து

-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தம்

-வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் திண்டுக்கல்லில் தவிப்பு

-வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாயும் வரை ரயில் மறியல் நீடிக்கும் என அறிவிப்பு

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு முட்டை விநியோகம் நிறுத்தம்

-நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அறிவிப்பு

-ஜல்லிக்கட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை

-காவல் துறை கூடுதல் ஆணையர்கள் பேச்சுவார்த்தை

-சங்கர், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்

-சேலத்தில் ரயில் சிறைபிடிப்பு

-ரயில்பெட்டி மீது ஏறி போராடிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது

-உயர்மின்அழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்தது

-மாணவர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்

-ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போரடி வருகின்றனர்

-டெல்லி வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

-ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற முடியுமா - முதல்வர் ஓபிஎஸ் டெல்லியில் ஆலோசனை

-ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தடியடியே நடக்கவில்லை- ஓபிஎஸ்

-ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்- ஓபிஎஸ்

-ஜல்லிக்கட்டு நடத்த தமிழகம் எடுக்கப் போகும் நடவடிக்கையை நீங்கள் விரைவில் அறிவீர்கள்- ஓபிஎஸ்

-டெல்லியில் முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு

-பிரதமரை சந்தித்த பின்னர் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்

-டெல்லியில் ஓபிஎஸ் பேட்டி

-சென்னையில் அடுத்த கட்ட போராட்டம் வெடித்தது

-சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்

-வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலை மறித்து போராட்டம்

-ஜல்லிக்கட்டு விவகாரத்துக்கு பதில் வறட்சி நிவாரணம் குறித்து ஓபிஎஸ் பேட்டி

-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தினேன்

-தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதை எடுத்துக்கூறினேன்

-39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கேட்டுள்ளோம்

-ஜல்லிக்கட்டு விவகாரத்தை பேசாமல் 'சின்னம்மா' புராணம் பாடிய ஓபிஎஸ்

-ஜல்லிக்கட்டுக்கு சட்ட திருத்தம் தேவை என மோடியிடம் வலியுறுத்தல்

-ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தேவை என வலியுறுத்தினேன் - ஓபிஎஸ்

-தமிழகத்தின் உணர்வுகளை மதிப்பதாக மோடி கூறினார்- ஓபிஎஸ்

-தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக அறிவேன் என மோடி கூறினார்

-உச்சநீதிமன்ற தீர்ப்பு தராத நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மோடிஆதரவு- ஓபிஎஸ்

-உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு எதுவும் செய்ய முடியாது- மோடி கைவிரிப்பு

-ஜல்லிக்கட்டு கலாசாரத்தை மத்திய அரசு பாராட்டுகிறது- மோடி

-ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு- மோடி

-ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஆதரவு- மோடி

-வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வரும் - மோடி

-முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசிய பின்னர் மோடி அறிவிப்பு

-ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது - மோடி

-ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது- மோடி

-வாடிவாசல் திறக்காதவரை வீட்டு வாசலை திறக்கமாட்டோம்- அலங்காநல்லூர் பெண்கள் ஆவேசம்

-ஜல்லிக்கட்டு- அதிமுக பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து- சசிகலா

-சென்னையில் 15 இடங்களில் போராட்டம்

-திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தல்

-பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் முதல்வர் ஓபிஎஸ்

-மோடியை சந்தித்து பேசிவிட்டு கிளம்பினார் ஓபிஎஸ்

-ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டத்தை விளக்கினார்

-ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கோரி வழக்கு

-ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்- மத்திய அரசு ஆலோசனை

-ஜல்லிக்கட்டு பிரச்சினை - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆலோசனை

-மதுரை தமுக்கம் மைதானத்தில் 3-வது நாளாக போராட்டம்

-கொட்டும் பனியில் தொடர்கிறது தமிழகம் முழுவதும் போராட்டம்

-உதகையிலும் கல்லூரி மாணவர்கள் பேரணி

-அலங்காநல்லூரில் 4-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

-சென்னை மெரினாவில் 3-வது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம்

-கோபிசெட்டி பாளையத்தில் மாணவர்கள் பேரணி

-நத்தத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாணவர்கள் நடைபயணம்

-தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பேரணி

-நாகர்கோவில், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பேரணி

-ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி திருப்பூரில் செய்தியாளர்கள் போராட்டம்

-தமிழ்நாட்டில் நாளை 4 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

-சென்னை அடையாறில் ஐடி பணியாளர்கள் தொடர் போராட்டம்

-மணப்பாறையில் தடையை மீறி 5-வது நாளாக ஜல்லிக்கட்டு

-தமிழகத்தில் நாளை திரையரங்குகள் மூடப்படுகின்றன

-திருச்சியில் முழு அடைப்பு போராட்டம்

English summary
Jallikattu protests gathered strength across Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X