For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஆசை நிறைவேறியது.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்பதில் நெட்டிசன்கள் குழப்பம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ள நிலையிலும், போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சிவசேனாதிபதி, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர் கோரிக்கைவிடுத்து வரும் சூழ்நிலையிலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிடுவதா, வேண்டாமா என்பதில் சமூக வலைத்தளத்தில் குழப்பம் நிலவி வருகிறது.

சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வலுப்பெற்றது. புரட்சியாக வெடித்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் சமூக வலைத்தள பதிவுகள் போராட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:

குழப்புகிறார்கள்

குழம்பிவிட்டது என்று சொல்லி குழப்பப் பார்க்கிறார்கள் . அவ்வளவுதான். மாணவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த டிவிட்.

யார் சொல்ல வேண்டும்

பிரஸ்மீட்டில் பேசியவர்கள் 10 வருடங்களாக ஜல்லிக்கட்டுக்காக போராடிவருபவர்கள். அவர்கள் சொல்வதையே கேட்காவிட்டால் வேறு யார் சொல்லி கேட்பீர்கள் என கேட்கிறது இந்த டிவிட்.

போதும்

வெற்றி பெற்றுவிட்டதால் இப்போது குட்பை சொல்லலாம். இந்த பெரும் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறது இந்த டிவிட்.

இனிதான் தேவை

இதுவரை நடந்த போராட்டத்த விட நாளைள இருந்து நடக்குற போராட்டத்த பொறுத்தே வெற்றி அமையும் என்கிறது இந்த டிவிட்.

பேசாமல் இருங்கப்பா

போராட்டங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக திருப்பப்படுவதாக ஹிப்ஹாப் ஆதி கூறிய நிலையில், நாளை முதல் மவுன போராட்டத்தில் ஈடுபட்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கிறது இந்த டிவிட்.

போராடலாமே

அவசர சட்டம் நிரந்தர சட்டம் ஆன பிறகு போராட்டத்தை விடலாம்.6நாட்கள் போராடிய நாம் இன்னும் 2நாட்கள் போராட முடியாதா

தொடரலாம்

விஷச்செடிகள் உள்ளே நுழைந்திருந்தால் பிடுங்கி எறிந்தாவது போராட்டம் தொடர வேண்டும் என்கிறது இந்த டிவிட்.

தப்பான செயல்

போராட்டத்தை வாபஸ் பெறச் செய்து வேண்டுகோள் விடுத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது முத்திரை குத்தப்படுவதை விமர்சனம் செய்கிறது இந்த டிவிட்.

குழப்பம்

அவசர சட்டம் - பாதி வெற்றி
நிரந்தர சட்டம் - மீதி வெற்றி
சரியாக வழி நடத்த ஆள் இல்லாமல் குழம்பி இருக்கிறது இளைஞர் பட்டாளம். இவ்வாறு கூறுகிறது இந்த டிவிட். ஆம். சமூக வலைத்தளத்தில் குழப்பம் தொடருகிறது.

English summary
Tamil netizens in the confusion mode after Jallikattu ordinance comes out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X