For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நூற்றுக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்.. அப்பல்லோ பரபரப்பு அப்டேட்ஸ்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதா குணமடைய பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

By Jaya
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து இன்று வரை 74 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஜெயலலிதாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை முன்பு கட்டுக்கடங்காமல் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அப்பல்லோ வளாகம் முன்பு பல்வேறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

apcrowd

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது முதலே அப்பல்லோ மருத்துவமனை வளாகம் பரபரப்படைந்தது.

இரவு 10.15 மணி : அப்பல்லோ வளாகம் முன்பு தொண்டர்கள் குவிந்தனர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இரவு 10.30 மணி: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி முதல்வர் ஜெயலலிதா குணமடைய பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் பதிவு செய்தார்.

இரவு 10.45 மணி : பிரதமர் மோடி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அப்பல்லோ நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

இரவு 11 மணி: ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார்
ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம் கேட்டறிந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக டுவிட்டரில் பதிவிட்டனர்.

இரவு 11.15 மணிக்கு அப்பல்லோவிற்கு விரைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

இரவு 11.30 : தமிழகம் முழுவதும் காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

12.05: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

English summary
CM Jayalalitha at Apollo hospital updater till 12 P.M. Central health minster Jagat Prakash Nadda speaks to Apollo hospital chairman Pratab reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X