For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கார்டன்' கண்காணிப்பில் தமிழக அமைச்சர்கள்! தோண்ட தோண்ட கொட்டிய கோடிகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து நடைபெறும் மேல்முறையீட்டு விசாரணை ஒருபுறம் நடைபெறும் நிலையில்.. தமிழக அமைச்சர்கள் குவித்து வரும் கோடிகளும் மாட மாளிகைகளும் போயஸ் தோட்டத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் ஒவ்வொரு அமைச்சரது ஒவ்வொரு அசைவும் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தது.. இதனடிப்படையில்தான் பல முறை அமைச்சரவை மாற்றங்கள் அடுத்தடுத்து அரங்கேறின..

Jaya's garden shocks over TN ministers assets

இதனாலேயே எந்த ஒரு அமைச்சருக்குமே விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா? என்ற கேள்வியுடன்தான் இரவுகள் கழிந்தன. அப்படியே 'கிடைத்தது' எல்லாம் கூட சரியான 'கணக்கோடு' சமர்ப்பிக்கப்பிட்டதும் நடந்தது...

இந்நிலையில் முதல்வர் பதவியை 'கார்டன்' இழக்க நேரிட்டது.. இதனால் 'மக்கள்' பிரதிநிதிகளின் கண்காணிப்பின் கீழ் அமைச்சர்களும் அவரது அடிப்பொடி பி.ஏ.க்களும் வந்தனர்..

பெங்களூர் வழக்கில் கடந்த சில வாரங்களாக மும்முரமாக கார்டன் இருந்த நிலையில் அதிரடியாக சில அமைச்சர்களின் பி.ஏ.க்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் 'அம்மாடியோவ்' ரகமமாம்...

ஓராண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் 'கிடைத்தவரைக்கும் லாபம்' என்கிற போக்கில் சில அமைச்சர்களும் மும்முரம் காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் சில அமைச்சர்கள் வாங்கிக் குவித்த சொத்துகளு அசர வைத்திருக்கிறதாம்..

தற்போது மீண்டும் அனைத்து அமைச்சர்களும் கார்டனின் முழுமையான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனராம்.

English summary
Former TN CM and ADMK leadr Jayalalithaa's Poes Garden shocked over Tamilnadu Ministers assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X