For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்ற முடியாது.. ஜெ. தடாலடி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: திமுக தலைவர் கருணாநிதி தம் மக்கள், தன் குடும்ப நலன் என்றுதான் நினைப்பார். அவருக்கு தமிழக மக்களின் மீது அக்கறையில்லை என்று என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகளையே 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். வுக்கு பதிலடி கொடுத்தார்.

காஞ்சிபுரம் அருகே வாரணவாசி ஊராட்சியில் இன்று அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Jaya slams DMK for its failure on manifesto

காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உட்பட்ட 18 அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா வாக்கு சேகரித்த ஜெயலலிதா, திமுகவையும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், 2016ம் ஆண்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும் ஒப்பிட்டு பேசி பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா.

இதற்கு முந்தைய கூட்டத்தில் பேசாத பல விசயங்களை ஜெயலலிதா பேசிய ஜெயலலிதா தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்

ஜெயலலிதாவின் பிரச்சார உரையிலிருந்து....

-அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

-காஞ்சிபுரத்தில் ஏரிகளை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன

-செங்கல்பட்டில் ஏரிகள் புனரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது

-செய்யூர், மதுராந்தகம் ஏரிகள் புனரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது

-பூண்டி நீர்த்தேக்கம் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது

-சொன்னதையும் செய்துள்ளேன் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்: ஜெ

-கற்பனை செய்ய முடியாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்

-மக்களால் நான் மக்களுக்காவே நான்

Jaya slams DMK for its failure on manifesto

-சொல்லாத பலவற்றையும் செய்துள்ளேன்

-எனது தலைமையிலான அரசு வசந்தத்தை கொடுத்துள்ளது

-காஞ்சிபுரம் தண்டலையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ஜெ.,

-பொன்னேரில் தொழில் முனைய அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது: ஜெ.,

-காஞ்சிபுரத்தில் 2048 அடுக்குமாடி குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளன: ஜெ.,

-3 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார் ஜெயலலிதா

-பூரண மதுவிலக்கு பற்றி பேசும் கருணாநிதி, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்?

-அரசு மதுக்கடைகளை மூடிவிட்டு தனியார் கிளப்புகளில் மது விற்க கருணாநிதி திட்டமிடுகிறார்

-பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றமுடியாது

Jaya slams DMK for its failure on manifesto

-அதிமுக ஆட்சி அமைந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்

-பூரண மதுவிலக்கு அதிமுக ஆட்சியில் மட்டுமே நிறைவேற்ற முடியும்

-கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை ஜெ., பட்டியலிட்டார்

-சென்னையில் வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்று விளக்கம் அளித்தார் ஜெயலலிதா

-நூற்றாண்டுகளில் பெய்யாத மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது

-பெரும் வெள்ளத்திலும் நிவாரணப்பணிகள் உடனடியாக செய்யப்பட்டன

-வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டது

-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது

-வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு செய்த பணிகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது

-திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருவது பகல்கனவாகும்

-வெள்ளத்தால் 320 பேர் மாண்டனர் என்று திமுகவினர் வடிகட்டிய பொய்யை கூறுகின்றனர்

-செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்து விடப்படவில்லை

-இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணம் திமுக

-ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தாமதப்படுத்தியது திமுக

-திரைப்படத்துறையை கபளீகரம் செய்தது திமுக

-கருணாநிதி ஆட்சியில் வேதனை மேல் வேதனைதான் கிடைத்தது

-அன்புச் சகோதரியின் ஆட்சியில் சாதனை மேல் சாதனை நடைபெற்றுள்ளது

-மதுரையில் தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது தெரியாதா?

-தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது ஏன்?

-கருணாநிதிக்கு தன் மக்கள் நலம்தான் முக்கியம்

-தன் மக்கள் நலனுக்காக கருணாநிதி செய்த பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்

-திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி ஜெயலலிதா பிரச்சாரம்

-திமுக தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்ன திமுக அதை நிறைவேற்றியதா?

-கையகள நிலம் கூட திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை

-2006ல் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை மீண்டும் 2016லிலும் திமுக கொடுப்பது ஏன்?

-முல்லைபெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களுக்கு திமுக தொடர்ந்து துரோகம் இழைக்கிறது

-முல்லைப்பெரியாறு அணையில் 152 தண்ணீர் தேக்கவேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம்

-கருணாநிதி குழப்பத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது

-2006ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016 தேர்தல் அறிக்கையில் மீண்டும் கூறியுள்ளனர்

-தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்று திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்

-90 சதவிகிதம் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர்

-தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்

-மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 120 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது

-கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியில் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்

-கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சத்து 49ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

-ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

-சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்

-அம்மா திட்டங்கள் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டுள்ளது

-சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் அரசு உங்கள் அன்புச்சகோதரியின் அரசு

-தாய்மார்களுக்கு விலையில்லா, மிக்சி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது

-காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

-முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது

-முல்லைபெரியாறு அணை வலுப்படுத்தப்பட்டு 152 அடியாக உயர்த்தப்படும்

-கேபிள்டிவி அரசுடமையாக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

-5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார் ஜெயலலிதா

-குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி

-இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

-நவீன பசுமை வீட்டு வசதித்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

-இருண்ட தமிழகம் ஒளிபெறும் என்று வாக்குறுதி அளித்தேன்

-தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது

-தேர்தல் பிரச்சாரத்திற்கு காஞ்சிபுரம் வருகை தந்தார் ஜெயலலிதா

-18 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து காஞ்சிபுரத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம்

-காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வாக்கு சேகரிப்பு

English summary
CM Jayalalitha came down heavily on the DMK for its failure to fulfill its promises to the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X