For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்றும் எம்.எல்.ஏ இல்லை.. இன்றும் பதவியில் இல்லை... ஜெயலலிதாவும், சனிக்கிழமை ராசியும்!

Google Oneindia Tamil News

சென்னை: இது இயல்பாக நடக்கிறதா அல்லது குறிப்பிட்டு நடக்கிறதா என்று தெரியவில்லை. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பது என்பது இதுவரை தி்ங்கள் அல்லது சனிக்கிழமைகளில் மட்டுமே நடந்து வந்துள்ளது. இப்போதும் கூட அவர் சனிக்கிழமையில்தான் 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்கிறார்.

ஜெயலலிதா 5வது முறையாக இன்று முதல்வராகிறார். இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக திமுக தலைவர் கருணாநிதிதான் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். வேறு எந்தத் தலைவரும் அதிக அளவில் முதல்வர் பதவியை வகித்ததில்லை. அவருக்கு அடுத்து ஜெயலலிதா நான்கு முறை முதல்வராக இருந்தார். தற்போது கருணாநிதியின் சாதனையை சமன் செய்யவுள்ளார்.

Jaya swears in a Saturday for 2nd time

ஒரு முதல்வராக, தமிழகத்தை இந்த இரு தலைவர்களும்தான் அதிக காலம் ஆண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அவர் முதல் முறையாக 1991ம் ஆண்டு முதல்வர் பதவியில் அமர்ந்தார். 5 ஆண்டுகள் இந்தப் பதவிக்காலம் நீடித்தது. 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். 1996ம் ஆண்டு மே 12ம் தேதி வரை முதல்வராக நீடித்தார். அப்போது அவர் பர்கூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். முதல் முறை ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற கிழமை திங்கள்கிழமையாகும்.

அடுத்து 2001ம் ஆண்டு மே 14ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா. ஆனால் இந்த முறை அவர் உச்சநீதிமன்றக் கண்டனத்தைத் தொடர்ந்து பதவி விலகி நேரிட்டது. 2001 மே 14 முதல் 2001 செப்டம்பர் 21ம் தேதி வரை அவர் முதல்வராக இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வரானார். 2வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் திங்கள்கிழமைதான். 2வது முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்றபோது எம்.எல்.ஏவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3வது முறையாக ஜெயலலிதா முதல்வரானது 2002ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியாகும். அதன் பின்னர் 2006 மே 12 வரை அவர் முதல்வராக இருந்தார். இந்த முறை அவர் பதவியேற்ற கிழமை சனிக்கிழமையாகும். முதல்வராகப் பதவியேற்ற பின்னர் அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

4வது முறையாக 2011ம் ஆண்டு மே 16ம் தேதி முதல்வரானார் ஜெயலலிதா. அது திங்கள்கிழமையாகும். ஆனால் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் பெற்றதால் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அவர் பதவியை இழந்தார். அப்போது அவர் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏவாக இருந்தார்.

கடந்த 4 முறையில் அவர் 3 முறை திங்கள்கிழமையன்று பதவியேற்றுள்ளார். ஒரு முறை சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். அவர் சனிக்கிழமை பதவியேற்றபோது எம்.எல்.ஏவாக இல்லை. அதேபோல இன்று அவர் முதல்வராகப் பதவியேற்கும்போதும் எம்.எல்.ஏவாக இல்லை என்பது ஒரு எதிர்பாராத ஒற்றுமையாகும்.

English summary
ADMK chief Jayalalitha is taking oath in a saturday for the second time in her political history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X