For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேப்டன் டிவியில் டெலிஷாப்பிங், மக்கள் டிவியில் முடக்குவாத சிகிச்சை: ஜெயா டிவியில் அம்மா லைவ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநரை சந்தித்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் படத்தை ரத்து செய்துவிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அதே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் முதல்வராக உள்ளார்.

அவர் நாளை காலை 11 மணிக்கு பிரமாண்டமாக நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார்.

ஜெயா டிவி

ஜெயா டிவி

ஜெயா டிவியில் தினமும் மதியம் 1.30 மணிக்கு திரைப்படம் ஒன்றை ஒளிபரப்புவார்கள். ஆனால் இன்றோ ஜெயலலிதா பல மாதம் கழித்து போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளதை நேடியாக ஒளிபரப்ப திரைப்படத்தை ரத்து செய்துவிட்டனர்.

கேப்டன் டிவி

கேப்டன் டிவி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடத்தும் கேப்டன் டிவியில் டெலிஷாப்பிங் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தை வாங்குவமாறு கூறி வருகிறார்கள். முன்னதாக கோலிவுட் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியில் காதல் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது.

மக்கள் டிவி

மக்கள் டிவி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மக்கள் டிவியில் ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகள் அல்ல மாறாக மூலிகை நேரம் என்ற நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் முடக்குவாதம் பற்றி சித்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

கேப்டன் நியூஸ்

கேப்டன் நியூஸ்

விஜயகாந்துக்கு சொந்தமான கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் அதிமுகவினர் விதிகளை மீறி சென்னை மாநகர் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளது பற்றியும், ஜெயலலிதாவால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது குறித்தும் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கிறது.

English summary
Jaya TV has cancelled the afternoon movie inorder to cover Jayalalithaa's outing after 7 months. Captain TV is showing teleshopping programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X