For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் சமாதிக்கு யார் வந்தாலும் நாசமா போவாங்க...ஜெ. கனவில் சொன்னதாக பீதி கிளப்பும் ஆர்கே நகர் வேட்பாளர்

தம்முடைய சமாதிக்கு யார் வந்தாலும் நாசமாக போவார்கள்; தமது ஆவி இப்போது எம்ஜிஆர் சமாதியில் இருக்கிறது என ஜெயலலிதா கனவில் சொன்னதாக கூறிவருகிறார் எம்ஜிஆர் நம்பி எனும் ஆர்கே நகர் வேட்பாளர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தம்முடைய சமாதிக்கு யார் வந்தாலும் நாசமாகத்தான் போவார்கள் என்று ஜெயலலிதா கனவில் தம்மிடம் கூறியதாக காமெடி செய்து கொண்டிருக்கிறார் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் எம்ஜிஆர் நம்பி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை போன்ற டூப்ளிகேட்டுகளும் தீபாவை போன்ற ஒரிஜனல் வாரிசுகளும் புற்றீசலைப் போல கிளம்பிவிட்டன. ஜெயலலிதாவின் மகன், மகள் என்றெல்லாம் கூட கிளம்பிவிட்டார்கள்.

இந்த வரிசையில் எம்ஜிஆர் என்னை படிக்க வைத்தார்...எங்க பார்த்தாலும் ஜெயலலிதா என்னிடம் பேசுவார் என பில்டப்புகளுடன் வந்திருக்கும் புதியவர்தான் எம்.ஜி.ஆர். நம்பி. இவர் தற்போது அனைத்திந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தைத் தொடங்கி ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரம்.

ஜெ. கல்லறைக்கு போகலையே

ஜெ. கல்லறைக்கு போகலையே

அத்துடன் நின்றாலும் பரவாயில்லை. சென்னையில் செய்தியாளர்களிடம் எம்ஜிஆர் நம்பி கூறியதாவது: நான் எம்ஜிஆர் நினைவிடத்தில் மட்டும்தான் அஞ்சலி செலுத்தினேன். ஜெயலலிதா கல்லறை பக்கம் போகவே இல்லையே.

கனவில் வந்த ஜெ...

கனவில் வந்த ஜெ...

ஏனெனில் ஜெயலலிதா என்னுடைய கனவில் வந்து நான் இறந்த பிறகும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறார்கள். என் நினைவிடத்துக்கு யார் வந்தாலும் அவர்கள் நாசமாகத்தான் போவார்கள்.

இதெல்லாம் நடந்ததா?

இதெல்லாம் நடந்ததா?

ஓபிஎஸ் வந்தார்... பதவி பறிபோனது... சசிகலா வந்தார் ஜெயிலுக்கு போனார்; தீபா வந்தார் கணவர் பிரிந்தார்... தினகரன் வந்தார் சின்னம் பறிபோனது..

என் ஆவி எம்ஜிஆரிடம்...

என் ஆவி எம்ஜிஆரிடம்...

இப்போதும் தலைவர் எம்ஜிஆரிடம் ஒரு குடும்பத்தின் தொந்தரவு தாங்கவில்லை.. என் ஆவியை அழைத்துக் கொள்ளுங்கள் என்றேன்... அவரும் என் ஆவியை அழைத்துக் கொண்டார்... எம்ஜிஆர் சமாதியில்தான் நானும் இப்போது இருக்கிறேன் என ஜெயலலிதா சொன்னார். அதனால் ஜெயலலிதா சமாதியில் மட்டுமே நான் அஞ்சலி செலுத்தினேன். இப்போது என் பயணத்தை தொடங்குகிறேன்.

இவ்வாறு எம்ஜிஆர் நம்பி கூறினார்.

இன்னும் எத்தனையோ!

English summary
Expelled ADMK Cadre MGR Nambi has launched MGR Makkal Munnetra Kazhagam. He said that Jayalalithaa's ghost is now in MGR's Memorial place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X