ஜெயக்குமாருக்கு எவ்வளவு திமிர்.. எவ்வளவு எகத்தாளம்.. என்ன தகுதி இருக்கிறது.. விளாசிய ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தனக்கு நிதியமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறும் ஜெயக்குமாருக்கு எவ்வளவு திமிர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனக்கு நிதியமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர் சாடினார்.

அதிமுக இரண்டாக உடைந்த பிறகு ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உதயமானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்படவே அந்த அணியினர் டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட தொடங்கினர்.

இரட்டைஇலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணி ஈபிஎஸ் அணியாக மாறியது.

விறுவிறுவென நடந்த வேலை

இந்நிலையில் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் இணைய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து இரு அணிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது.

முட்டுக்கட்டை போட்ட ஜெயக்குமார்

ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரின் துடுக்குத்தனமான பேச்சு, இருஅணிகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டது. இரு அணிகள் இணைய வேண்டும் என்பதற்காக தான் வகிக்கும் நிதியமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன் என்றார்.

விளாசிய ஓபிஎஸ்

அவரது இந்த பேச்சு ஓபிஎஸ் அணியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து இதுவரை வாய்த்திறக்காமல் இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில ஜெயக்குமாரை விளாசி தள்ளினார்.

எவ்வளவு திமிர்?

தனக்கு நிதியமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறும் ஜெயக்குமாருக்கு எவ்வளவு திமிர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தனக்கு நிதியமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் அவர் கடுமையாக சாடினார்.

யாரு? யாருக்கு கொடுப்பது?

ஜெயலலிதாவால் 2 முறை தான் முதல்வாரக்கப்பட்டதாக கூறிய ஓபிஎஸ், தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் அவர்கள் பங்கு கொடுக்கிறார்களாம் என்றார். மேலும் யாரு? யாருக்கு பங்கு கொடுப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
O.Panneerselvam condemns minister Jayakumar. He asked Jayakumar who told him to leave the finance minister position. He said that Jayakumar not deserve to talk about me.
Please Wait while comments are loading...