ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் ஊசியால் கொல்லப்பட்டுள்ளார்.. பொன்னையன் பகீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டிராய்டு ஊசி என்ற ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டுள்ளது என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பொன்னையன்.

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ஜெ.க்கு ஸ்டிராய்டு ஊசி நெடு காலம் கொடுக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பை இந்த ஊசி அதிகப்படுத்திவிடும். தோல் பிரச்சினைக்காக இந்த ஊசியை கொடுத்ததாக கூறி ஜெயலலிதாவுக்கு அவருடன் இருந்த சசிகலா கொடுத்து வந்துள்ளார்.

Jayalalitha killed by slow poison: Ponnaiyan

ஆனால் வெகு காலம் முன்பே இந்த ஊசியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர். ஸ்டிராய்டு ஊசியால் இன்பெக்ஷன் உடல் முழுக்க பரவி விடும். இந்த ஊசி ஸ்லோ பாய்சன் போன்றது. நீரிழிவும் 400க்கு மேல் கூடிவிடும். இன்பெக்ஷனும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவிவிடும்.

இதையெல்லாம் அறிந்த பிறகே சசிகலா மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடமிருந்து விலகினேன். இதற்கெல்லாம் விசாரணை கமிஷன் அமைத்தால்தான் தீர்வு கிடைக்கும். இவ்வாறு பொன்னையன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Jayalalitha killed by slow poison, says O.Pannerselvam team's senior Ponnaiyan.
Please Wait while comments are loading...