For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு பிடித்த பச்சை நிறம்... புதன்ஹோரை.. விடாமல் தொடரும் 5,2 ராசி நம்பர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா தனக்கு பிடித்தமான பச்சை நிறப் புடவையில் வந்து சென்டிமெண்ட் ஆக புதன் ஹோரையில் பதவியேற்றார் ஜெயலலிதா.

பச்சை நிற பேனாவில் கையெழுத்து போட்ட ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அவர் உட்பட மொத்தம் 29 பேர் உள்ளனர். இதுவும் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான 2ம் எண் சென்டிமெண்ட்படியே நடைபெற்றது. அதே நேரத்தில் ஜெயலலிதா 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார்.

ஆன்மீகம், ஜோதிட கருத்துக்களில் அதீத நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா. எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பாக நல்ல நாள், நல்ல நேரம், திதி, ஹேரை பார்த்து பதவியேற்பார் ஜெயலலிதா. சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியிட்டது வரை அனைத்தையும் நல்ல நாள், நேரம் பார்த்தை செயல்படுத்தினார் ஜெயலலிதா.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் அமிமுக, கூட்டணி கட்சியினர் போட்டிடியிட்டனர். 7 தொகுதிகள் தோழமை கட்சியினருக்கும், 227 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மே 16ம் தேதி தேர்தல் நடைபெற்று மே 19ம் தேதி முடிவுகள் வெளியானது.

134 தொகுதிகளில் வென்று வெற்றி வாகை சூடிய ஜெயலலிதா, 23ம் தேதியான இன்று முதல்வராக பதவியேற்றார். இதே போல கடந்த ஆண்டு மே 23ம் தேதி இதே நாளில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இம்முறை ஜெயலலிதா பதவியேற்ற போது எந்த வித சர்ச்சைகளும் எழவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று கம்பீரமாக இம்முறை முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.

எங்கும் பச்சை நிறம்

எங்கும் பச்சை நிறம்

ஜெயலலிதாவிற்கு பிடித்தமான பச்சை நிறத்தில் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சை நிற புடவை கட்டியிருந்த ஜெயலலிதா, பச்சை நிற பேனாவில் கையெழுத்திட்டு முதல்வராக பதவியேற்றார்.

புதன்ஹோரை

புதன்ஹோரை

புதன்ஹோரையில் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா அரை மணி நேரத்தில் பதவியேற்பு விழவை முடித்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்து போட்டார். இந்த நிகழ்வுகள் எல்லாமே 12 மணி முதல் 1 மணிக்குள் புதன்ஹோரையில் நடந்து முடிந்தது.

பச்சை மோதிரம் இல்லை

பச்சை மோதிரம் இல்லை

கடந்த முறை ஜெயலலிதா அணிந்திருந்த பச்சை மோதிரம் இம்முறை அணியவில்லை. அதே போல கடந்த ஆண்டு 5 கோப்புகளில் கையெழுத்திட்ட ஜெயலலிதா இம்முறையும் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

2 மற்றும் 5 எண் ராசிகள்

2 மற்றும் 5 எண் ராசிகள்

ஜெயலலிதா உட்பட அவரது அமைச்சரவையில் 29 பேர் இன்று பதவியேற்றனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக காலை சிற்றுண்டி வழங்கும் உத்தரவில் முதல் கையெழுத்து போட்ட ஜெயலலிதா, விவசாய பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்து போட்டார்.

மின்சாரம் ரத்து

மின்சாரம் ரத்து

அனைத்து வீடுகளுக்கும் 100யூனிட் இலவச மின்சாரம் டாஸ்மாக் கடைகள் 10 மணிக்கு பதிலாக 12 மணிக்கு திறக்கப்படும், தாலிக்கு 8 கிராம் தங்கம் என 5 மிக முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டு தனது பணியை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.

English summary
Tamilnadu Cheif Minister J.Jayalalitha's green colour sentiment and Number Sentiement in 15th assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X