For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று அழுகை.. இன்று ஆனந்தம்.. இது அதிமுக அமைச்சர்களின் அதிரடி மாற்றம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எட்டு மாதங்கள் முன்பு அழுது வடிந்தபடி பதவியேற்ற தமிழக அமைச்சரவை, இன்றி சிரிப்பும், கும்மாளமுமாக பதவியேற்றுக் கொண்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 27ம் தேதி, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்ததும், அவரது முதல்வர் பதவி பறிபோனது. இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம், தலைமையில், செப்டம்பர் 29ம் தேதி, 30 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.

Jayalalitha swearing in ceremony: All ministers are very happy

அப்போது, பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களுமே அழுதபடி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்து கொண்டனர். அப்போது ஜெயலலிதா புகைப்படத்தை, பன்னீர்செல்வம் தனது முன்னால் வைத்து பார்த்தபடி பதவி பிரமாணம் செய்தார். தாடி வளர்த்து சோகமாக காட்சியளித்தார் பன்னீர்செல்வம்.

இன்றும் பன்னீர்செல்வம் தாடி வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதா தலைமையிலான இந்த அமைச்சரவையில் கூத்தும், கும்மாளமுமே இருந்தது. 28 அமைச்சர்களும் உற்சாகத்துடன் உரத்த குரலில் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

English summary
Overwhelmed by emotion and with tears in their eyes, O Panneerselvam, handpicked by J Jayalalithaa for his loyalty, today took oath as Chief Minister of Tamil Nadu along with 30 other ministers who were equally grim at the swearing in ceremony. But today, all ministers are very happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X