ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி.. நலமாக உள்ளதாக டாக்டர்கள் தகவல்! #Jayalalithaa

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

jayalalithaa admited in hospital

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக இரவு 10.15 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ள நிலையில், பொது பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

jayalalithaa admited in hospital

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

jayalalithaa admited in hospital

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்ததால் ஏற்பட்ட சுகவீனப் பிரச்சினையின் காரணமாக நேற்று திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

jayalalithaa admited in hospital

English summary
Chief Minister Jayalalitha admitted in Hospita jayalalithaa admited in hospital
Please Wait while comments are loading...

Videos