For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராக ஜெயலலிதா 5வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்ற உடன் கடந்த ஜூலை மாதம் கொடநாடு செல்வார் என்று கூறப்பட்டது, ஆனால் அவர் செல்லவில்லை.

அதன்பிறகு சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ம்தேதி சிறுதாவூர் பங்காளவிற்கு சென்றார் ஜெயலலிதா.

Jayalalithaa to leave for Kodanad

கடந்த 10 நாட்கள் அங்கிருந்த அவர் கட்சிப்பணிகளை கவனித்தார். நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட ஜெயலலிதா கடந்த 10ம்தேதி மாலை போயஸ் கார்டன் திரும்பினார். சென்னையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தலைமைச் செயலகத்தில் நேற்று 440 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் புதன்கிழமையன்று அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் சிறப்பான வரவேற்பும் கொடுக்கப்படுகிறது.

அதே நேரம், அதிமுகவின் 44ம் ஆண்டு விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆண்டுவிழா அன்று கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து ஜெயலலிதா தொண்டர்களை சந்திப்பார். கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை. எனவே இந்த ஆண்டு கட்சி அலுவலகத்துக்கு அவர் வர வாய்ப்புள்ளதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை அவர் கொடநாடு செல்லும் பட்சத்தில், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்களை சந்திப்பார் என்றும்
கூறப்படுகிறது.

English summary
Chief minister J. Jayalalithaa would be leaving for Kodanad estate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X