For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்... எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

ஜெயலலிதாவின் முகம் மரணத்திற்குப் பின்னரும் பொலிவு மாறாமல் காணப்பட்டதற்கு அவரது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள்தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அழகு முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்பட்டது. இது அவரை நன்றாக கவனித்தவர்களுக்கு தெரியவரும்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததாக கூறப்பட்டது. டிசம்பர் 6ம் தேதி அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடலை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காணப்பட்டது. காரணம் சட்டசபையில் பார்க்கும் போது காணப்படும் அதே பொலிவுடன் இருந்தது ஜெயலலிதாவின் முகம்.

Jayalalithaa's Face and four dots

கடந்த 75 நாட்கள் மருத்துவமனையில் நோய் பாதிப்பில் உயிரிழந்தவர் போலவே ஜெயலலிதாவின் முகம் காணப்படவில்லை. மலர்ந்த தாமரை போல முகம் பொலிவுடன் காணப்பட்டதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் அவரது கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளிகள்தானாம். எம்பார்மிங் முறையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், "இறந்தவர்களின் முகம் மற்றும் கைகள் போன்ற பகுதிகள் பளிச்சென்று இருக்கவும்.. அடக்கம் செய்யும் நேரம் வரையிலும் கெடாமல் இருக்கவும் செய்யப்படுவதுதான் 'எம்பாமிங்'.

Jayalalithaa's Face and four dots

அரை மணி முதல் ஒரு மணி வரை இதற்குத் தேவைப்படும். பொதுவாக நடிகர்களுக்கு இந்த மாதிரி எம்பாமிங் செய்வதில்லை. எம்ஜிஆருக்கு எம்பாமிங் செய்யப்படவில்லை. சிவாஜி கணேசன் போன்றவர்களுக்கும் கூட செய்யவில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தை மக்கள் பார்க்கும்போது அதே தோற்றப் பொலிவு இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்திருப்பார்கள்," என்கிறார்கள்.

English summary
Embalming chemical is used to preserve dead human body temporarily for public display at a funeral, for religious reasons, or for medical and scientific purposes such as their use as anatomical specimens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X