For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றவாளி ஜெ. சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும்.. மக்கள் அதிகாரம் கோரிக்கை

ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவருடைய நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளி ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது சட்ட விரோதம் என்பதால் மெரினாவில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரியுள்ளனர்.

மேலும், ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:

ஜெ. படங்கள்

ஜெ. படங்கள்

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அதன் குறியீடாக உள்ள ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். மாணவர்களின் பைகள், பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்கள் நீக்கப்பட வேண்டும்.

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் ஆகியவற்றில் உள்ள ‘அம்மா'வை அகற்ற வேண்டும். அவர் முதல்வராக இருக்கும் போது இந்த பெயர்கள் வைக்கப்பட்டாலும் தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. எனவே இந்தப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும்.

மெரினா நினைவிடம்

மெரினா நினைவிடம்

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். ஒரு குற்றவாளியின் நினைவிடத்தை அரசு பராமரிப்பது சட்ட விரோதம். எனவே, ஜெயலலிதா நினைவிடத்தை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படங்கள், நினைவிடங்கள், அவரது பெயரிலான திட்டங்கள் அனைத்து உடனடியாக அரசு நீக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் மக்கள் அதிகாரம் அமைப்பு போராட்டம் நடத்தும் என்றும் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Jayalalithaa’s picture from school books should be removed said Makkal Athikaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X