For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக அளவில் டிரெண்டான முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை... #Jayalalithaa

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்த செய்தி உலகளவில் அதி வேகமாக டுவிட்டரில் பதிவிடப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை:உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு கட்ட சிறப்பு சிகிச்சைகளுக்கு பிறகு அவர் உடல் நலம் சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.நேற்று காலை கூட அதிமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன்,ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டதாகவும்,அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

jayalalithaa

இந்நிலையில் ஞாயிறு இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இதனை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ அறிக்கையும் உறுதி செய்தது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தமிழக முதல்வர் உடல்நலம் குறித்த தகவலை தெரிந்து கொள்ளவும்,அவர் விரைவில் உடல்நலம் மீண்டு குணமாகவும் பலர் சமூகவலைத்தளம் வாயிலாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ஞாயிறு இரவு முதல் உலகளவில் சமூல வலைத்தளங்களில் டிரெண்டான செய்தியாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த செய்திகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளன. இந்திய அளவில் #Jayalalithaa,#Amma, #Apollo ஆகிய ஹேஸ்டேக்குகள் முதலிடத்தை பிடித்துள்ளன. # TN Governor,Anna univercity ஆகிய ஹேஸ்டேக்குகளும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

English summary
#Jayalalithaa,#Amma, #Apollo are now one of the top four world wide trending topics on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X