For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கர மடத்தில் அமைதியாக பூஜை செய்த ஜெயேந்திரர்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் நேற்று சங்கர மடத்தி்ல வழக்கம் போல அமைதியாக தனது பணிகளைச் செய்தாராம் ஜெயேந்திரர்.

8 ஆண்டு கால சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்பட அத்தனை பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Jayendrar plans for Tirupathi trip

குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது கோர்ட் கூறியுள்ள காரணமாகும்.

இந்த நிலையில் தீர்ப்பையொட்டி நேற்று ஜெயேந்திரரின் ஆதரவாளர்களும், பக்தர்களும் பெரும் பதட்டத்தில் இருந்தனர். பிரார்த்தனைகள், வழிபாடுகள், சிறப்புப் பூஜைகள் என டென்ஷனாக காணப்பட்டனர்.

ஆனால் ஜெயேந்திரர் வழக்கம் போல தனது வேலைகளில் ஈடுபட்டிருந்தாராம். அமைதியாக இருந்தாராம், சலனமின்றி அவரது முகம் இருந்ததாக சங்கர வட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான பூஜைகளில் அவர் நேற்று முழுவதும் ஈடுபட்டிருந்தாராம். தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தால் திருப்பதிக்குப் போக வேண்டும் என்று அவர் கூறியுள்ளாராம். தற்போது தீர்ப்பு சாதகமாக வந்திருப்பதால் நாளை அவர் திருப்பதி போகலாம் என்று தெரிகிறது.

English summary
The mood on the Kanchi Mutt premises was sombre. "The senior acharya conducted the daily pooja and other routine chores," said a mutt source. But devotees as well as the mutt staff hope the two seers would be acquitted in the case. In the hope of a favourable verdict, the Jayendra Saraswathi has planned a trip to Tirumala on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X