For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் பரபரப்பு.. தனியாக இருந்த தலைமை ஆசிரியை வீடு புகுந்து நகைகள் கொள்ளை- வீடியோ

ஈரோடு அசோக் நகரில் தனியாக வசித்து வரும் தலைமை ஆசிரியை அமுதா வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 30 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு அசோக் நகரில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையின் வீட்டு ஜன்னலை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. தினம் தினம் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

 Jewels looted in a teachers house at Erode

ஆனால், காவல்துறையினர் அவற்றை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவது இல்லை என்கிற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஈரோடு அசோக் நகரைச் சேர்ந்தவர் அமுதா. இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவர் தன்னுடைய அறையில் உறங்கிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலையில் எழுந்து பார்த்த தலைமை ஆசிரியை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
In Erode Ahsok nagar, a teacher's house 30 sovereign jewels kept in locker was looted by thieves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X