ஏன் எழுத வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்.. பன்னீரை கலாய்க்கும் ஜோதிமணி!

By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பது போல தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பன்னீர்செல்வம், அடுத்த ஒரே மணி நேரத்தில் அதற்கு எதிராக வேறு ஒன்றைப் பதிவை செய்ததைக் கலாய்த்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.

இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்பதில்தான் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் பணியில் இரண்டு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து அறிவிப்போடு தினகரனின் அரசியல் ஆசையும் முடிவுக்கு வந்துவிட்டது. அவரால் பழையபடி ஆக்டிவ் பாலிடிக்ஸில் கவனம் செலுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டு அணிகளுக்குள்ளும் இருக்கும் உள்முரண்பாடுகளால் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

டெல்லிக்குப் போன ஓ.பி.எஸ்

நேற்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.கவில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு குறித்தும் ஆதரவு குறித்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விவாதித்தார். அதன்பிறகு நேற்று மாலை பிரதமரை சந்தித்துப் பேசினார்.

என்ன பேசினார்கள் இருவரும்

தமிழகத்தின் பிரச்னைகள் தொடர்பாக விவாதித்ததாகவும் தகவல் பரப்பினர். உள்ள இரண்டு அணிகளையும் ஒன்றிணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை. இரண்டு அணிகளிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால், ஒன்றிணைவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

டிவிட்டரில் உளறிய ஓபிஎஸ்

இந்நிலையில், இன்று காலை ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷாக்காகிப் போன ஓ.பி.எஸ்.

இதனைக் கண்டித்து பல எதிர்வினைக் கருத்துக்கள் வந்தன. இதனால் அதிர்ந்து போன பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று ஆலோசிக்கப்படும் எனப் பதிவு செய்தார். சில மணி நேரங்களில் ஏற்பட்ட மனமாற்றத்தை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். மக்கள் மத்தியில் ஆழம் பார்க்கவே இவ்வாறு பதிவிட்டார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

கலாய்த்த ஜோதிமணி

இதுகுறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, ' பா.ஜ.கவிற்கும் பன்னீர்செல்வத்திற்கும் உள்ள உறவு வெளிப்படையான ஒன்றுதான். எதற்கு ட்வீட் போட்டு பிறகு அழிக்கவேண்டும் எனக் கலாய்த்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
TNCC spokesperson Jothimani has ridiculed the tweet of former CM O Panneerselvam in his Twitter page on poll alliance.
Please Wait while comments are loading...