For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு போராட்ட கொடுமைகளை தேசிய அளவில் டிரெண்ட் செய்த நெட்டிசன்கள்! #JusticeforJallikattu

டிவிட்டரில் #JusticeforJallikattu என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதை இந்திய அளவில் டாப் டிரெண்டிங்காக மாற்றியுள்ளனர் தமிழக நெட்டிசன்கள்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று, அதற்கு ஆதரவாக களத்தில் பல நூறு ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், சமூக வலைத்தளத்திலும் ஜல்லிக்கட்டு ஆதரவு கருத்துக்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

தேசிய ஊடகங்கள், மோடி முதலான பெரும் அரசியல் தலைவர்கள், அதிகார வர்க்கத்தினர் கவனத்திற்கு இப்பிரச்சினை எளிதில் சென்று சேருவதற்கு டிவிட்டர் டிரெண்ட் முக்கிய பங்கு வகிக்கும். எனவே அதில் #JusticeforJallikattu என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதை இந்திய அளவில் டாப் டிரெண்டிங்காக மாற்றியுள்ளனர்.

இந்த டேக்கில் ஜல்லிக்கட்டு கள நிலவரம், ஜல்லிக்கட்டு கோரும் காரணம், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான விளாசல் என பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பாராட்டு

எப்படி அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்பதை நாட்டுக்கு உணர்த்தியுள்ளனர் தமிழர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து இந்த வட இந்திய நெட்டிசன் புகழ்ந்துள்ளார்.

மனித உரிமை மீறல்

போராட்டம் நடத்துவோருக்கு தண்ணீர், சாப்பாடு கூட தராமல் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என இந்த டிவிட்டில் குற்றம்சாட்டப்படுகிறது. மாட்டுக்காக பரிந்து பேசுவோர் மனிதர்களுக்காக வரவில்லையே என்ற ஆதங்கம் இந்த டிவிட்டில் தெரிகிறது.

சென்னையிலும் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

ரியல் ஹீரோக்கள்

இசையமைப்பாளர்கள் ரியல் ஹீரோக்களாக மாறிவிட்டதாக கூறுகிறது இந்த டிவிட். ஹிப்ஹாப் தமிழா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் போராட்ட களத்திற்கு நேரில் வந்ததை சுட்டுகிறது இந்த டிவிட்.

விடாது போராட்டம்

கண்டுக்காம விட்டா மூணு நாள் லீவுல கத்திட்டு அவனவன் வேலைய பார்க்க போய்டுவாங்கனு நினைச்சவங்களுக்கு நல்லசெருப்படி.. என்று கூறுகிறது இந்த டிவிட்.

கலைத்துவிடலாம்

"சுப்ரமணியசுவாமியால தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது பண்ணமுடியும்னா அது இந்த ஆட்சிய கலைச்சி விடுறது மட்டும் தான்" என சொல்கிறது இந்த டிவிட்.

யார் கட்டுப்பாட்டில் போலீஸ்?

"அடிக்கிறது பூரா போலீஸ்னா தமிழகஅரசும் இதுக்கு பின்னாடி இருக்கா இல்ல உண்மையாவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுனா போலீஸ் தமிழக அரசு கட்டுபாட்டுல இல்லையா" என்று கேட்கிறது இந்த டிவிட்.

English summary
Netizens extend their support to Jallikattu as they make #JusticeforJallikattu tag to trend in the Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X