கபாலிடா... கல்பனா அக்காவுக்கு போட்டியாக களமிறங்கிய மன்னை சாதிக்!

சென்னை: கானக்குயில் கல்பனா அக்காவுக்கு போட்டியாக தானும் கபாலிடா பாடலைப் பாடி தனது டவிட்டர் ( அவர் அப்டித்தான் சொல்றார் பாஸ்) பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் மன்னை சாதிக்.

அவ்வப்போது பிரபல தமிழ்ப் பாடல்களைப் பாடி, சமயங்களில் அபிநயத்தோடு அதனை நடித்துக் காட்டியும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருபவர் கல்பனா அக்கா.

Kalpana akka and Mannai sathik viral video

இவர் பிறந்தது யாழ்பாணத்தில் என்றாலும், மேற்படிப்பை இந்தியாவில் தான் பயின்றுள்ளார். பிறகு ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். பாலேஸ்வரன் என்பது இவரது கணவர் பெயராம்.

இவரது பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். தனியாக ரசிகர் பக்கம் ஒன்று கூட கல்பனா அக்காவிற்காக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபகாலமாக கல்பனா அக்காவிற்கு போட்டியாக மன்னை சாதிக் என்பவரும் தனது பதிவுகளால் புதிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார். இவருக்கும் ரசிகர்கள் ஏராளம்.

கல்பனா அக்கா அளவிற்கு இவரது பாடல்கள் இருக்காது. நல்ல இனிமையான குரலில் பாடும் இவர், அவ்வப்போது தனது பேச்சுக்களால் தான் மிரள வைப்பார். அதிலும் டிவிட்டரை இவர் டவிட்டர் என அழைப்பதே தனி ஸ்டைல்.

இவர் தனது பதிவு ஒன்றில் ரஜினியின் கபாலிடா படப்பாடலைப் பாடி பதிவேற்றம் செய்துள்ளார். அதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கல்பனா அக்காவிற்கு போட்டியாக, அவரது பாடல் ஒருபுறமும், மற்றொரு புறம் இவரது வீடியோவும் இணைத்து இந்த வீடியோவை அவர் தயார் செய்துள்ளார். கல்பனா அக்காவைப் போன்றே நடந்து கொண்டும், அமர்ந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் பாடுகிறார் மன்னை சாதிக்.

இந்த வீடியோவைப் பார்க்கும் நமக்கு கண்களெல்லாம் வேர்த்து விடுகிறது. வயிறு வலி இலவச இணைப்பு. நீங்களும் பார்த்து என்ஜாய்!

English summary
A video of Mannai Sathik and Kalpana akka singing Nerupuda song is viral now in social media.
Please Wait while comments are loading...

Videos