For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்பளவு வெள்ளநீரில் நின்று தேசியக் கொடி ஏற்றிய அஸ்ஸாம் பள்ளி... கமல் பாராட்டு

சுதந்திர தினத்தையொட்டி மார்பளவு வெள்ளநீரில் தத்தளித்து தேசியக் கொடியை ஏற்றிய அஸ்ஸாம் பள்ளியின் நாட்டுப்பற்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மார்பளவு தண்ணீர் இருந்தாலும் தேசப்பற்றுதான் முக்கியம் என எடுத்துரைக்கும் இந்த புகைப்படம்தான் சுதந்திர தினவிழாவின் சிறந்த படமாகும் என்று நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி அபாய எல்லையை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.

 Kamal praises the picture which shows a school hoisted flag in flood water

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி வெள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தார்.

இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம், தூப்ரி மாவட்டத்தில், நோஸ்கராவில் உள்ள ஒரு பள்ளியில் மார்பளவு வெள்ள நீர் இருந்துபோதிலும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தது அவர்களின் நாட்டுப்பற்றையே காட்டுகிறது. இந்த புகைப்படத்தை அந்த பள்ளியின் ஆசிரியர் மிஸானூர் ரெஹ்மான் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.

இதற்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதான் சுதந்திர தினத்தின் சிறந்த புகைப்படம் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Kamal Hassan expresses his glad about the picture which was posted by Assam teacher that even though flood water came upto chest level, the few students and teachers hoisted the National Flag on the occasion of Independence Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X