அரசு மீதான கமல் குற்றச்சாட்டுகள்.. டிடிவி தினகரன் என்ன சொல்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் தக்க ஆதாரத்தோடு அரசு மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்று அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனிடம், நடிகர் கமல் வைக்கும் ஊழல் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் அளித்த தினகரன், கமல் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்றும், கமல் மக்களால் மதிக்கப்படுபவர் என்று பதில் அளித்தார்.

Kamal should release evidence of corruption, says Dinakaran

மேலும், கமல் வைக்கும் விமர்சனங்கள் மீது அமைச்சர்கள் ஒருமையில் பதிலளிக்க கூடாது என்றும் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டார். தமிழக அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து மக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

தான் யாருக்கும் போட்டியாக சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்த தினகரன்,

தன்னை சிலர் ஒதுக்கி வைப்பதற்குப் பயம்தான் காரணம் என்பதைக் காலம் உணர்த்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, தற்போது மத்திய அரசு கேஸ் மானியம் ரத்து செய்துள்ளது மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Kamal challenged by Edappadi Palaniswami-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Actor Kamal Haasan should release evidence of corruption, said Dinakaran today in Chennai.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்