தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.. கமல்ஹாசன்

By:

சென்னை: தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட் வெளியிட்டுள்ளார்.

Kamal wishes Jaya for speedy recovery

முதல்வர் ஜெயலலிதா உடல் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும்
சி.வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறையினர் வாழ்த்தும், பிரார்த்தனையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று டிவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.

அதில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

English summary
Actor Kamal Haasan has wished CM Jayalalitha for a speedy recovery from her illness.
Please Wait while comments are loading...

Videos