For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகதாயி பந்த் நிறைவு : தமிழகம் - கர்நாடக பேருந்து போக்குவரத்து சீரானது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மகதாயி நதிநீர் பங்கீடு விவாகத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற 12 மணிநேர பந்த் முடிவடைந்ததால் எல்லைகளில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

வட கர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க மகதாயி நதியிலிருந்து 7.56 டி.எம்.சி நீர் எடுக்க அனுமதி கோரியுள்ளது. கலாசா-பண்டூரி வழியாக நீர் எடுக்க அனுமதி கோரிய கர்நாடக மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.

Karnataka bandh hits transport services in T.N.

மகதாயி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு நடுவர் மன்றம் அநீதி இழப்பு என்று கன்னட அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது

முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை நடைபெற்றது. இதனையடுத்து ஓசூர் எல்லையில் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

Karnataka bandh hits transport services in T.N.

தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் 270 அரசுப் பேருந்துகள் ஓசூர் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன மாலை 6 மணிக்கு பந்து நிறைவடைந்ததை அடுத்து ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து மைசூர் செல்லும் பேருந்துகள் பண்ணாரி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியது.

English summary
Saturday's bandh in Karnataka, called by organisations opposed Saturday in protest against the Mahadayi Water Disputes Tribunal (MWDT) order declining Karnataka's plea disrupted inter-State transport services in Krishnagiri and Erode districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X