For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதிக்கு ஹை டெக் வேன் ரெடி: தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் ஒத்திகை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அக்னி வெயில் சூடு பறக்க.... அரசியல் களமோ அதை விட சூடாக உள்ளது. வாக்காளர்களை சந்திக்க வேட்பாளர்களும், அரசியல் தலைவர்களும் தயாராகி வருகின்றனர். அக்னி வெயிலில் பல கிலோமீட்டர்கள் சாலையில் பயணிக்கும் தலைவர்களுக்காக குளு குளு வசதியுடன் கூடிய சொகுசு வேன்கள் ரெடியாகி விட்டது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரத்திற்காக செல்வதற்காக தயாராகி உள்ள சொகுசு வேனில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏறி வசதிகள் சரியாக இருக்கிறதா என்று ஒத்திகை பார்த்தார்.

கருணாநிதிக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள நாற்காலியை வேனில் ஏற்றி இறக்கியும், அதில் அமர்ந்தும் ஸ்டாலின் ஒத்திகை பார்த்து அதில் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும் கூறினார்.

கடந்த ஆண்டு அக்னி வெளியிலுக்கு முன்பாகவே தேர்தல் முடிந்து விட்டது. இம்முறை சரியான அக்னி வெயில் காலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அனல் தூள் பறக்கும். கொளுத்தும் வெயிலில் ஊர் ஊராக சூறாவளிதேர்தல் பிரசாரம் செய்யும் அரசியல்கட்சி தலைவர்களின் நிலைமை கடினமான ஒன்று.

சொகுசான பிரச்சார வாகனம்

சொகுசான பிரச்சார வாகனம்

திமுக தலைவர் கருணாநிதிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வேன் தயார் நிலையில் உள்ளது. இந்த பிரசார வேனில், இருக்கையை எளிதாக ஏற்றி இறக்கவும் 10 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சகல வசதிகளும் தயார்

சகல வசதிகளும் தயார்

இந்த வாகனங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதன பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி, ஏ.சி, எல்.இ.டி. டிவி, வெஸ்டன் மாடல் கழிவறை, குளியல் அறை, நீர் சேமிப்பு தொட்டி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சாய்ந்து உறங்கலாம்

சாய்ந்து உறங்கலாம்

இதில் படுத்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகளையே படுக்கையாக மாற்றும் வசதியும் செய்யப்படுகிறது.மேலும் இந்த பிரசார வேனில் நின்றவாறே பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வேனில் நடுப்பகுதியில் தானியங்கி சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரத்திற்கு தயார்

பிரச்சாரத்திற்கு தயார்

இரவு வேளையில் திறந்த நிலையில் நின்று பிரசாரம் செய்வதற்கு வசதியாகவும், பகல்வேளையில் பிரசாரம் செய்யும்போது வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குடைபோன்ற கூரையும் சேர்த்து வடிவமைக்கப்படுகிறது. பிரசார வேனில் ஒரே நேரத்தில் 3 பேர்நின்றவாறு பிரசாரம் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பளிச் விளக்குகள்

பளிச் விளக்குகள்

இது தவிர இரவு வேளையில் பிரசாரம் செய்கிறவரின் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக வெளிப்படுத்துவதற்காக நவீன மின்னொளி விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. மின்விளக்குகளை ஒளிரச்செய்வதற்காக தானியங்கி நவீன ஜெனரேட்டர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரச்சாரம் எப்போது?

பிரச்சாரம் எப்போது?

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு முடிந்த உடன் ஏப்ரல் முதல்வாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விடுவார்கள். விரைவில் தேர்தல் சுற்றுப்பயண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
DMK supremo M Karunanidhi ready to campaign in a 'hi-tech' van. According to party sources the van is fitted with a moving chair in which he can recline and other normal fittings like microphones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X