For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னட எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு கருணாநிதி கடும் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்துத்துவா தீவிரவாதிகளால் கன்னட எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச் சிறந்த கன்னடஎழுத்தாளருமான எம்.எம். கலபுரகி மர்ம நபர்களால் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மூட நம்பிக்கைகளை எதிர்த்து தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வந்தவர் கலபுரகி அவர்கள்.

கலபுரகி அவர்கள் கொல்லப்பட்டதற்கு எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலபுரகி அவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீது கர்நாடக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has condemned the Kanna writer Kalburgi's murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X