எ.ச.இ.நே. படத்தில் நடித்த சிறுமிகளுக்கு மல்லி, முல்லை, ரோஜா, அல்லி என பெயர் வைத்த கருணாநிதி

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

சென்னை: என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் நடித்துள்ள பெண் குழந்தைகள் நான்கு பேருக்கும் திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார்.

இயக்குனர் ஜெயம் ராஜா நடிகர் அவதாரம் எடுத்துள்ள படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்த படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் ராஜாவின் மகள்களாக நடித்துள்ளனர். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்த சிறுமிகளின் பெயர் அதிதி, அக்ரிதி, அஷிதி, ஆப்தி ஆகும்.

எ.ச.இ.நே. படத்தில் நடித்த சிறுமிகளுக்கு மல்லி, முல்லை, ரோஜா, அல்லி என பெயர் வைத்த கருணாநிதி

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அந்த 4 சிறுமிகளையும் தனது கோபாலபுரம் வீட்டுக்கு வரவழைத்து அவர்களை வாழ்த்தினார். அவர்களின் பெயரை கேட்ட அவர் அவர்களுக்கு தமிழ் பெயர் சூட்டினார். அந்த சிறுமிகளுக்கு கருணாநிதி சூட்டிய பெயர் விவரம் வருமாறு,

அதிதி - மல்லி

அக்ரிதி - முல்லை

அஷிதி - ரோஜா

ஆப்தி - அல்லி

கருணாநிதி தமிழ் பெயர் சூட்டியது அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு மகிழ்ச்சி அளித்தது.

English summary
DMK supremo Karunanidhi has given tamil names to the quadruplets who have acted in the movie Enna Satham Intha Neram.
Write a Comment