For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்ட காலம் வாழ்ந்து ஏழைகளுக்கு பாடுபடுங்கள்... ராகுலை வாழ்த்திய கருணாநிதி, ஸ்டாலின்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து நமது மக்களுக்கு குறிப்பாக அடித்தட்டு ஏழைகளுக்கு பாடுபட வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து நமது மக்களுக்கு குறிப்பாக அடித்தட்டு ஏழைகளுக்கு பாடுபட மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். உங்களது எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான பிறந்தநாளை கொண்டாடும் ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

English summary
DMK President M Karunanidhi today greeted Congress Vice-President Rahul Gandhi on his birthday, wishing him success in all his endeavours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X