ஜெ. விரைவில் உடல்நலம் பெற கருணாநிதி வாழ்த்து!

By:

சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று பணியைத் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு காய்ச்சல் குணமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இருப்பினும் எப்போது வீடு திரும்புவார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசகர் ராவ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Karunanidhi wishes Jayalalithaa a speedy recovery

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியும் ஜெயலலிதா உடல்நலம் பெற வாழ்த்துவதாக தம்முடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதியின் வாழ்த்து:

முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன.

முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த பதிவுடன் 1991-ம் ஆண்டு தேர்தலில் சட்டசபையில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழா படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருக்கிறார் கருணாநிதி.

English summary
DMK leader Karunanidhi today wishes Jayalalithaa a speedy recovery.
Please Wait while comments are loading...

Videos