For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுவின் தீமைகளும், மதுவிலக்கின் அவசியமும் – கரூர் பள்ளிகளில் மதிமுக நடத்திய கட்டுரை போட்டி

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழகத்தின் சார்பாக மதுவின் தீமைகளும் மதுவிலக்கின் அவசியமும் என்ற தலைப்பில் பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.

karur MDMK held an essay writing for Students…

அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக செயலாளர் கோ.கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கட்டுரைப்போட்டியில் கரூர் மாவட்ட மதிமுக செயலாளர் பரணி மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் ம.தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளர் சுமங்கலி செல்வராஜ், தேர்தல் பணிக்குழு துணை தலைவர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை உற்சாக படுத்தினார்கள்.

karur MDMK held an essay writing for Students…

மேலும் ஒரு சிலர் கட்டுரை எழுதியவர்கள் சிலர் திருக்குறளை உதாரணம் காட்டி எழுதினர். கட்டுரை போட்டியில் பங்கு கொள்ள வந்த மாணவர்கள் நம்மிடம் கூறும் போது இன்று பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு குடிதான் முக்கிய காரணமாக இருக்கிறது என்றனர் .

karur MDMK held an essay writing for Students…

மதிமுகவினர் கூறும் போது மதுவிலக்கை அவசியம் குறித்து இந்த போட்டியில் விதையாய் விதைத்துள்ளோம் என்றனர் .. விடுமுறை நாளிலும் மதுவிற்கு எதிராக கட்டுரை எழுத ஐநூறுக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் வந்தது அரவக்குறிச்சி பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..

karur MDMK held an essay writing for Students…

மேலும் இந்த கட்டுரை போட்டியில் மாவட்ட அவைத்தலைவர் ஆண்டிபட்டி ராமசாமி, பரமத்தி ஒன்றிய செயலாளர் புளியம்பட்டி கந்தசாமி, துணை செயலாளர் ராசை சிவா, ஒன்றிய அவைத்தலைவர் காளிகுறிச்சி, ஒன்றிய நிர்வாகிகள் மணி, ஆசை வடிவேலு, பூபதி, குணசேகரன், மருதமுத்து, தண்டபாணி, முத்துராஜ், க.பரமத்தி ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பரசன், தாந்தோன்றி நகர செயலாளர் சத்தியமூர்த்தி, கரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள்முருகன், மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி ஒன்றிய ம.தி.மு.க செய்திருந்தது

English summary
Karur MDMK party held a competition for writing essay about Alcohol and its bad outcomes in Karur schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X