For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகள் அறிவியல் மாநாடு.. கரூரிலிருந்து புதுக்கோட்டைக்குப் புறப்பட்ட இளம் விஞ்ஞானிகள்!

Google Oneindia Tamil News

கரூர்: புதுக்கோட்டையில் டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு சிறப்பு பேருந்துகளில் கரூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகள் இன்று காலை 10 மணிக்குப் புறப்பட்டனர்.

இதற்கான வழியனுப்பு விழா கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட அறிவியல் இயக்க கௌரவ தலைவர் தீபம்.சங்கர் தலைமை தாங்கினார்.

Karur young scientists off to Pudukottai to attend children's science conference

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில குழு உறுப்பினரும், கரூர் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான சொ. ராமசுப்பிரமணியன் கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தார். இது குறித்து கூறிய அவர், "பருவநிலை மாற்றம்" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தில் இருந்து பரணி வித்யாலயா மூன்று ஆய்வுகள், பரணி பார்க் இரண்டு ஆய்வுகள், குமரன் பள்ளி, ரெங்கநாதன்பேட்டை, வெள்ளியணை, நடையனூர், மார்னிங் ஸ்டார் ஆகிய ஐந்து அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆய்வு, புன்னம் சேரன், பி.ஏ.வி.பி, ஜெயராம், சேரன் மெட்ரிக் தலா ஒரு ஆய்வு; வீதம் மொத்தம் 11 பள்ளிகளில் (5 அரசு, 6 தனியார் பள்ளிகள்) இருந்து 14 ஆய்வுக்கட்டுரைகளை கரூர் மாவட்டம் சார்பாக மாநில அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கின்றனர்.

மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெறும் மாநில அறிவியல் மாநாட்டில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் மாவட்டம் என்ற பெருமையை கரூர் மாவட்டம் தக்க வைத்துள்ளது" என்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்ட செயலர் சுதாதேவி வரவேற்றார். புகளூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முருகேசன், வெள்ளியணை அரசு பள்ளி தலைமையாசிரியர் தமிழரசன், கரூர் ஜேசீஸ் சங்க முன்னாள் தலைவர் ரமேஷ் வாழ்த்திப் பேசினர். அறிவியல் ஆசிரியர்கள் - குமரன் பள்ளி பிரேம்குமார், ரெங்கநாதன்பேட்டை சண்முகவடிவு, வெள்ளியணை தனபால், நடையனூர் சுதா முன்னிலை வகித்தனர்.

அறிவியல் இயக்க கரூர் மாவட்ட பொருளாளர் பிரியா நன்றி கூறினார்

English summary
Karur young scientists were given a send off to Pudukottai to attend children's science conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X