For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமலை நாயக்கரின் 433வது பிறந்தநாள்: முதல் முறையாக இன்று அரசு விழாவாக கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

மதுரை: திருமலை நாயக்கரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

கட்டடக் கலையில் மதுரையை சிறந்த நகராக்கிய பெருமை மன்னர் திருமலை நாயக்கரையே சாரும். இன்று அவரது 433வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

King Thirumalai Nayak Birth Day

இந்தாண்டு முதல் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். மேலும், 1584ம் ஆண்டு தைப்பூச நாளில் திருமலை நாயக்கர் பிறந்தார் என்று கூறப்படுகிறது. எனவே, தைப்பூச திருநாளான இன்று திருமலை நாயக்கர் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்று திருமலை நாயக்கர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, சின்னய்யா, ரமணா ஆகியோர் மதுரை சென்று, அங்கு திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மதுரை ஆட்சியர் வீரராகவராவ், மேயர் ராஜன் செல்லப்பாவும் மரியாதை செலுத்தினர்.

English summary
Tamilnadu government has celebrated the king Thirumalai Nayak's Birth Day today. Thirumalai Nayak's statue in front of Madurai Thirumalai Nayak palace has been honored by political personalities,his followers and local citizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X