For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனியர்களை களத்தில் நிறுத்திய அதிமுக- கோவை மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமைச்சர் உள்ளிட்ட சீனியர்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் கோவை மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு:

எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் தொகுதியில் சிறைத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிஎஸ்.பி. வேலுமணி(48) போட்டியிடுகிறார். எம்.ஏ., எம்.பில் படித்துள்ள அவர் கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆவார். 2006ம் ஆண்டு தேர்தலில் பேரூரிலும், 2011ம் ஆண்டு தேர்தலில் தொண்டாமுத்தூரிலும் போட்டியிட்டு வெற்றி வெற்றவர்.

பொள்ளாச்சி வ.ஜெயராமன்

பொள்ளாச்சி தொகுதியில் சட்டசபை துணை தலைவரான பொள்ளாச்சி வ. ஜெயராமன்பொள்ளாச்சி வ. ஜெயராமன் போட்டியிடுகிறார். அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரான அவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஏ., எம்.பில். பி.ஹெச்டி படித்துள்ள அவர் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பொள்ளாச்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொள்ளாச்சியில் போட்டியிட்டு வென்றார். தற்போது உடுமலைப்பேட்டை சட்டசபை உறுப்பினராக உள்ளார்.

பி.ஆர்.ஜி.அருண்குமார்

பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார்(53) கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 1977ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கும் அவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதிமுகவுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 6 முறை சிறை சென்றுள்ளார். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தனது ஊரில் சிறப்பாக செயல்படுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது பெற்றவர்.

சிங்கை என்.முத்து

திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வரும் சிங்கை என்.முத்து (68) சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பட்டதாரியான அவர் தற்போது சிந்தாமணி கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளார். 44 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவர் அதிமுக கிளை செயலாளர், சிங்காநல்லூர் தொகுதிச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

அம்மன் கே.அர்ச்சுணன்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அம்மன் கே.அர்ச்சுணன்(58) மசாலாப் பொடி தொழில் செய்து வருகிறார். 1989ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கும் அவர் தற்போது கோவை மாநகராட்சி பணிக்குழு தலைவராக உள்ளார். கோனியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக உள்ள அவர் அதிமுகவில் எம்.ஜி.ஆர். மன்ற தலைவர், கிளை செயலாளர், மாநகர் மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

ஆர்.கனகராஜ்

சூலூர் தொகுதியில் போட்டியிடும் ஆர். கனகராஜ்(65) கோவை மாவட்ட ஊராட்சி தலைவராக உள்ளார். அவரது மனைவி ரத்தினம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளார். அவரது மகனும், மகளும் அதிமுக நிர்வாகிகள் ஆவர். வி. மேட்டூரை சேர்ந்த அவர் விவசாயம், தேங்காய் வியாபாரம், கோழிப் பண்ணை தொழில் செய்து வருகிறார். 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உள்ள அவர் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். 8ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அ.சண்முகம்

கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அ. சண்முகம் (55) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். 1977ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் உள்ள அவர் தற்போது எட்டிமடை பேரூராட்சி துணை தலைவராக உள்ளார். எட்டிமடை பேரூராட்சி அதிமுக செயலாளர், கிணத்துக்கடவு தொகுதி அதிமுக இணை செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவிகளை வகித்தவர்.

வி.சி.ஆறுக்குட்டி

கவுண்டம்பாளையத்தில் போட்டியிடும் வி.சி. ஆறுக்குட்டிவி.சி. ஆறுக்குட்டி(59) விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். 1972ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இருக்கும் அவர் 6ம் வகுப்பு வரை படித்துள்ளார். விளாங்குறிச்சியை சேர்ந்த அவர் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடர்ந்து 3 முறை விளாங்குறிச்சி ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். 2011ம் ஆண்டு தேர்தலில் கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்டு வென்றார்.

கஸ்தூரி வாசு

அதிமுக பொதுக் குழு உறுப்பினரும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத் தலைவருமான கஸ்தூரி வாசு வால்பாறை(தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் தான் அவரது சொந்த ஊர். பி.ஏ. படித்துள்ள அவர் கோவை மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

ஓ.கே.சின்னராஜ்

மேட்டுப்பாளையத்தில் காரமடை அருகே உள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஒசூரை சேர்ந்த ஓ.கே. சின்னராஜ்(59) போட்டியிடுகிறார். பி.யூ.சி. வரை படித்துள்ள அவர் 1972ம் ஆண்டு முதல் அதிமுகவில் உள்ளார். கட்சிக்காக 7 முறை சிறைக்கு சென்றுள்ளார். கட்சியில் பல்வேறு பதவிகள் வகித்த அவர் 2005ம் ஆண்டு முதல் கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார். 2006, 2011ம் ஆண்டு தேர்தலில் மேட்டுப்பாளையத்தில் போட்டியிட்டு வென்றவர்.

English summary
Above is the biodata of the ADMK candidates of Coimbatore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X