ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை வச்சே ஆகணும்.. எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். அணி செக்!

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி எடப்பாடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணி திட்டவட்டமாக தெரிவத்துள்ளது.

ஓபிஎஸ் ஆதரவு அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முதல்வர் பதவி மற்றும் பொதுச்செயலாளர் பதவியை தாங்கள் கேட்கவில்லை என்று கூறினார்.

KP.Munusamy urges CBI investigation on the Jayalalitha's death

தாங்கள் கேட்பதெல்லாம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்க வேண்டும் என்பது தான் என்று கூறிய கே.பி.முனுசாமி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என கே.பி.முனுசாமி வலியுறுத்தினார். இதற்கு ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் கூறினார்.

English summary
Former minister KP.Munusamy urges CBI investigation on the Jayalalitha's death. Tamilnadu govt should propose the central govt for the cBI investigation.
Please Wait while comments are loading...