For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணகிரி: தண்ணீர் விற்பனை லாரிகளை சிறை பிடித்த கிராம மக்கள் - வீடியோ

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணையில் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நீரை தண்ணீரை விற்பனைக்கு எடுத்துச் செல்வதால் கொதித்தெழுந்த மிட்டப்பள்ளி கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கால்வாய் வழியாகச் செல்லும் கே.ஆர்.பி அணை நீரை விற்பனைக்கு எடுத்துச் சென்ற போது கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து தற்போது பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரை தண்ணீர் வியாபாரிகள் லாரிகளில் எடுத்துச் சென்று விற்று வருகின்றனர்.

Recommended Video

    Villagers Blocked Water Lorries In krishnagiri-Oneindia Tamil
     Krishnagiri Mittapalli village people arrested lorry water sellers

    கடந்த ஆண்டு கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்துப் போயிருந்த நிலையில் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதால் விவசாயம் செய்து கொள்ளலாம் என மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் காய்கறி மற்றும் பூ உற்பத்தியில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கால்வாய்களில் ஓடும் அணை நீரை தண்ணீர் வியாபாரிகள் எடுத்துச் செல்வதைக் கண்ட மிட்டப்பள்ளி கிராம மக்கள் லாரிகளை மடக்கிப் பிடித்தனர். மேலும், அந்த லாரிகளை வெளியே விடாமல் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    From KRB dam water is opened for irrigation. But lorry owners taking water from canal and selling it. Angered Mittapalli village people caught the lorries and not allowing to move.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X