For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே புகுந்து பலாத்கார முயற்சி... அறுத்துக் கொன்ற பெண்!

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்து கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் வேலுச்சாமி லாரி மற்றும் ஆட்டோக்களுக்கு சரக்கு ஏற்றும் "லோடுமேன்" வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்கள் பல்லடம் அறிவொளி நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

Lady cut the throat of rapist in Erode

ஈஸ்வரன் என்பவர் பல்லடம் டி.கே.டி மில் பேருந்து நிறுத்தம் அருகே மரக்கடை நடத்துகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களும், அறிவொளி நகரில் வசிக்கின்றனர்.

கடையில் அறிமுகமான வேலுச்சாமியை தனது மனைவி செல்விக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஈஸ்வரன். இவர் தற்சமயம் சிறுநீரக கோளாறு காரணமாக ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இரு வாரங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஈஸ்வரன் ஈரோடு சென்றார். இதை சாதகமாக பயன்படுத்திய வேல்சாமி, தனியாக வீட்டிலிருந்த செல்வியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து, அறிவொளி நகர் புறக்காவல் நிலையத்தில் செல்வி தரப்பினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார், வேலுச்சாமியை காவல்நிலையத்துக்கு கூப்பிட்டு கண்டித்து அனுப்பினர். இந்நிலையில், மீண்டும் ஈஸ்வரன் சிகிச்சைக்காக ஈரோடு சென்றுள்ளார். இதை தெரிந்துகொண்ட வேல்சாமி, நேற்று அதிகாலை 2 மணிக்கு, குடிபோதையில் செல்வியின் வீட்டுக்கூரையை பிரித்து உள்ளே இறங்கினார். தூங்கிக்கொண்டிருந்த செல்வியிடம், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே நடந்த மோதலில் போதையிலிருந்த வேலுச்சாமி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்த செல்வி மயங்கிக்கிடந்த வேல்சாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதன் பின் விடியும் வரை அந்த வீட்டிலேயே தங்கியிருந்த செல்வி. காலை ஆறு மணிக்கு அரிவாளுடன் சென்று பல்லடம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

English summary
Erode lady cut a man’s throat when he was tried to rape her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X