For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அம்மா'வின் கொடநாடு எஸ்டேட்டில் அட்டூழியம் செய்த பெண் சிறுத்தை சிக்கியது

By Siva
Google Oneindia Tamil News

நீலகிரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் சுற்றித் திரிந்த 4 வயது பெண் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் கொடநாடு எஸ்டேட்டுக்கு தான் செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் பங்களா அருகே 4 வயது பெண் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. அது அப்பகுதியில் உள்ள சில ஆடுகளை அடித்துக் கொன்றுள்ளது.

Leopard captured from Jayalalithaa’s Kodanad estate

இது குறித்து அங்கு வசிக்கும் மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் பங்களா மற்றும் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள 2 இடங்களில் கூண்டுகள் மற்றும் கேமராக்களை வைத்தனர். சிறுத்தையை பிடிக்க கூண்டுகளில் 2 ஆடுகள் மற்றும் 1 நாயை பொறியாக வைத்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை பங்களா அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பவானி காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கு விட்டனர்.

சிறுத்தை பிடிபட்டதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

English summary
A four-year old female leopard was caught alive from ADMK chief Jayalalithaa's Kodanad estate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X