For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவிலக்கில் திமுக-அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிறது: திருமாவளவன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மே தினத்தை முன்னிட்டாவது கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக - அதிமுக கட்சிகள் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையில் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்மொழிந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டலிலிருந்து மீட்டெடுப்பதும் முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். தொழிலாளர்களை முதலாளிகள் மட்டும் சுரண்டுவதாகக் கருதக் கூடாது. அரசும் பல வழிகளில் சுரண்டிக் கொண்டே வருகிறது. அதில் ஒன்று தான் டாஸ்மாக் மதுக்கடை.

Liquor ban: Thirumavalavan condemns DMK, ADMK

சமூகத்தில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த கூலியைப் பிடுங்கிக்கொள்ள அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. கூலித் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் நாளெல்லாம், பொழுதெல்லாம் பாடுபட்டு பெற்ற கூலியை மதுக் கடைகளில் கொடுத்துவிட்டு சாலையில் மயங்கிக் கிடக்கும் அவலத்தை நாம் பார்க்கிறோம்.

மே தினத்தை முன்னிட்டாவது கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக - அதிமுக கட்சிகள் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையில் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.

நாடே கொந்தளித்து மதுக் கடைகளை மூடச் சொல்லிப் போராடியபோது மவுனம் சாதித்து வந்த தமிழக முதல்வர் அவர்கள் தற்போது படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். இந்தியாவிலேயே மக்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். அதனால் தான் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்னெடுத்த விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் ‘சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்' உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளோம். அத்துடன் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு, நாடு முழுவதும் குறிப்பாக, ஒன்றிய அளவிலும் தீவிர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளோம்.

மேலும் மது ஆலைகள் தொடங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்வதுடன், டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளோம். ஆகவே, தொழிலாளர்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யத் துடிப்பதுடன் மதுவிலக்குக் கொள்கையில் தெளிவற்ற நிலையிலிருக்கும் திமுக-அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
VCK chief Thirumavalavan said in a statement that ADMK and DMK's double role in connection with liquor ban is exposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X