For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூடப்பட்ட கடைகளில் ஆளுங்கட்சியினர் ஆசியோடு மதுவிற்பனை.. எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!

மூடப்பட்ட மதுக்கடைகளில் ஆளுங்கட்சியினர் ஆதரவோடு மதுவிற்பனை நடப்பதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மூடப்பட்ட மதுக்கடைகளில் ஆளுங்கட்சியினர் ஆதரவோடு மதுவிற்பனை நடப்பதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏவான செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு நிகழ்ச்சிகளில் செந்தில் பாலாஜி புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

liquor is selling illegally with support of ruling party politicians : MLA senthil balaji

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது மூடப்பட்ட மதுக்கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார்.

ஆளுங்கட்சியின் உயர்பதவிகளில் இருப்பவர்களிள் ஆசியோடு மது விற்பனை நடைபெறுவதாக அவர் சாடினார். மேலும் போலீசார் மாமூல் பெற்றுக்கொண்டு மதுவிற்பனைக்கு அனுமதிக்கின்றனர் என்றும் எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

மேலும் அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
MLA Senthil Balaji accuses govt. He said with the support of ruling party politicians liquor is selling illegally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X