For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகுதான் மதுபான சேல்ஸ் பல மடங்கு கூடியுள்ளது.. இந்த விந்தை ஏன் தெரியுமா?

ஒரு நபருக்கு இத்தனை பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்தினால் தட்டுப்பாடு தீரும் என்கிறார்கள் சில குடிகாரர்கள்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது விற்பனை படுவேகமாக ஏறி வருகிறது.

மதுபான கடைகளை மூடினால் மது விற்பனை குறையத்தானே செய்ய வேண்டும், எப்படி கூடுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை.

பெரும்பாலான மதுக்கடைகள் மூடுவிழா கண்டுவிட்டதால் ஆங்காங்கே திறந்திருக்கும் ஒருசில கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரே டாஸ்மாக்

ஒரே டாஸ்மாக்

உதாரணத்திற்கு நெல்லை மாவட்டத்தில் தென்காசி என்பது பெரிய நகராட்சி பகுதி. அங்கு இருந்த 7 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு விட்டன. போலவே, சுற்றுலாத் தலமான குற்றலாலத்தில் இருந்த 2 கடைகளில் ஒரு கடை மூடப்பட்டு விட்டது. இதனால் எஞ்சிய ஒரு கடையில்தான் தென்காசியிலுள்ள மொத்த குடிகாரர்களும் குவிந்துள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளில் குடிக்கு அடிமையானவர்களும் இந்த கடையில் மொய்க்கிறார்கள்.

தேனி நிலை

தேனி நிலை

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் தற்போது சுத்தமாக காலி. திறந்திருக்கும் ஒருசில கடைகளில் குடிகாரர்கள் முண்டியடிக்கிறார்கள்.

நிற்க முடியல

நிற்க முடியல

தேவைப்படும்போதெல்லாம் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று குடித்து வந்த குடிகாரர்களுக்கு இப்போது கால்கடுக்க நீண்ட நேரம் கியூவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இப்படி விற்பனை ஜோராக நடப்பதால் கடைகளில் மது வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் வாங்கிச் சென்றதை குடித்து காலி செய்யும் வரை அவர்கள் மீண்டும் டாஸ்மாக் பக்கம் வரமாட்டார்கள் என்பதால் இன்னும் சில நாட்களில் மது விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

கள்ளச்சந்தை

கள்ளச்சந்தை

ஒரு நபருக்கு இத்தனை பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்தினால் தட்டுப்பாடு தீரும் என்கிறார்கள் சில குடிகாரர்கள். அதேநேரம், இந்த நிலையை சாதகமாக்கி ஒரு சிலர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று கள்ள மார்க்கெட் நடத்தி வருகிறார்கள். இவ்வாறு பிளாக்கில் மதுபானம் விற்றதாக பெரம்பலூரை அடுத்த வெங்கடேசபுரத்தில் 4 பேர் போலீசில் சிக்கினர்.

English summary
Liquor sales on the rise in Tamilnadu after SC shuts down road side Tasmac shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X