For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 நிமிடம் பார்த்தாலே குற்றம்... பயமுறுத்துகிறார் பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம்

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை 10 நிமிடம் உற்றுப் பார்த்தாலே குற்றம்தான் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை வந்திருந்த தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பெண்களை 14 வினாடிகள் அல்ல... 10 வினாடிகள் தொடர்ந்து உற்றுப் பார்த்தாலே குற்றம்தான் என்று கூறுனார். மேலும் எல்லா சமூகத்தின் பெண்களுமே பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 வினாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
looking at women for 10 seconds is crime said Lalitha Kumaramangalam, the chairperson of National Women Commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X