மாயாற்றில் பெருவெள்ளம்... மண் எடுக்கச் சென்ற லாரி ஓட்டுநர்கள் தவிப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மாயாறு பகுதியில் தரைப்பாலம் உடைந்ததால், அங்கு வண்டல் மண் எடுக்கச் சென்ற லாரிகள் வெளியே வர முடியாமல் தவித்துக்கொண்டுள்ளன.

நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பவானி அணையில் நீர் நிரம்பி வருகிறது. வழக்கமாக, மாயாறு வழியாக பவானி அணைக்கு நீர் செல்லும். தற்போது, மாயாற்றின் குறுக்கே போடப்படிருந்த தரைப்பாலம் உடைந்தது.

 Lorry drivers locked in Mayaru flood in sathyamangalam

இதனால் ஆற்றில் வண்டல் எடுக்கச் சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளன. இதனால் அங்கு சிக்கியுள்ள லாரி ஓட்டுநர்களும் வெளியே வர முடியாமல் பரிதவித்துக்கொண்டுள்ளனர்.

நீலகிரி மலையில் ஒரே நாளில் 21 செ.மீ மழை பெய்த காரணத்தால் அங்கு வெள்ளம் எற்பட்டது. மேலும் அந்த நீர் பவானி அணையில் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Flood in the Valparai River-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
In Sathyamangalam Mayaru, heavy water is there, as Nilgiris got heavy rain yesterday and day before yesterday. Lorry drivers who went to take silt could not come out.
Please Wait while comments are loading...