For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரில் வருத்தம் தெரிவித்த தியாகு: தர்ணாவை வாபஸ் பெற்ற தாமரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சினிமா பாடலாசிரியர் தாமரையையும், மகனையும் கணவர் தியாகு நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் கடந்த 8 நாட்களாக தாமரை நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Lyricist Thamarai’s protest withdraw

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தியாகு, கவிஞர் தாமரையை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தியாகுவின் நடவடிக்கையை கண்டித்து, கவிஞர் தாமரை கடந்த மாதம் 27ஆம்தேதி முதல் 1ஆம்தேதி வரை 3 நாட்கள் சென்னை சூளைமேட்டில் உள்ள தியாகுவின் அலுவலகம் முன்பும், 3ஆம்தேதி ஒரு நாள் வேளச்சேரியில் உள்ள அவருடைய மகள் வீட்டு முன்பும் தர்ணாவில் ஈடுபட்டார்.நேற்று முன்தினம் போராட்ட இடத்தை வள்ளுவர் கோட்டத்துக்கு மாற்றிய கவிஞர் தாமரை அங்கு தர்ணாவை தொடர்ந்தார்.

8 நாள் போராட்டம்

8 ஆம் நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கணவர் தியாகு வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார். அவர் திரும்பி வர வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகவே வீதிக்கு வந்த போராடுகிறேன்.

ரூ.2கோடி இழப்பீடு

தியாகுதான் எனது வீட்டிற்கு வந்து பெண் பார்த்து, என்னை திருமணம் செய்து கொண்டார். இப்போது என்னை நிர்கதியாக விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதற்காக காவல்துறை, நீதிமன்றம் என செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விவாகரத்துக்கும் சம்மதிக்க மாட்டேன். என் மகனின் எதிர்காலத்திற்காகவும், என் வாழ்க்கைக்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும்'' என்றார்.

கடிதம் நிராகரிப்பு

கடிதம் மூலம் தியாகு தெரிவித்த வருத்தத்தையும் தாமரை நிராகரித்தார். தியாகு நேரில் வந்து வருத்தம் தெரிவித்தால் மட்டுமே ஏற்க முடியும் என தாமரை கூறினார். நேரில் வந்து வருத்தம் தெரிவிக்க தியாகுக்கு மாலை 6 மணி வரை தாமரை கெடு விதித்தார்.

Lyricist Thamarai’s protest withdraw

தியாகு சந்திப்பு

இதனையடுத்து வள்ளுவர் கோட்டம் வாசலில் தர்ணா போராட்டம் நடத்திய தன் மனைவி தாமரையை இன்று இரவு 9 மணிக்கு கணவர் தியாகு நேரில் வந்து சந்தித்தார்.

விசாரணைக்குழு

அப்போது இரு தரப்பினரின் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய நடுநிலையான பொதுவான விசாரணைக் குழு அமைப்பிற்கு தியாகு ஒத்துக் கொண்டார். மேலும், தான் வீட்டை விட்டு வெளியேறிய செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.

மனவருத்தம்

கடந்த எட்டு நாட்களாக, போராட்டத்தால், உங்களுக்கும், மகன் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும் மனவேதனைக்கு உளமார வருந்துகிறேன்,'' என்றும் அவர் கூறினார்.

Lyricist Thamarai’s protest withdraw

தர்ணா வாபஸ்

சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசிய பின்பு கவிஞர் தாமரை தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டார். இதன் பின்பு இது குறித்து தியாகு, தனது மனைவி தாமரைக்கு எழுதிய வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை பத்திரிகையாளர்களிடத்தில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனையடுத்து தாமரையின், போராட்டம், நேற்று, எட்டாவது நாளுடன் முடிவிற்கு வந்தது.

English summary
The protest of lyricist Thamarai, has withdraw her protest on Friday.who is demanding that her husband Thiyagu return home and tender an apology to her and her son. The lyricist had begun her sit-in protest, outside what she believes to be the office of her husband, on February 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X