For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகள் தற்கொலைக்கு இதுதான் காரணம்... மத்திய பிரதேச அரசு கொடுத்த புது விளக்கம்

மத்திய பிரதேச அரசு விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களுக்கு கொடுத்துள்ள விளக்கம் சமூக ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

போபால்: விவசாயிகள் தற்கொலைகளுக்கு, குடும்பப் பிரச்சினைகள், மதுப்பழக்கம், உடல் நலக்கோளாறு ஆகியவையே காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் பதிலில், 'போலீஸ் நிலையங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை குறித்த ஆவணப்பதிவுகள் இல்லை. தொழில்ரீதியான நஷ்டம், கடன் ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.

Madhya Pradesh govt gives a shocking reason for farmers suicide

'குடும்பப் பிரச்சனை, மதுப்பழக்கம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், சொத்துத் தகராறுகள் ஆகியவையே விவசாயிகள் தற்கொலைகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் 2011-ம் ஆண்டில் 1326-ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 2015-ல் 581-ஆக குறைந்துள்ளது என்ற புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து மத்தியப் பிரதேச விவசாயிகள் சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இது பழைய தந்திரம்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று காட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை.

விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத் திருப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி. தற்கொலைகளுக்கு கடன்தான் காரணம் என்று காவல் நிலையங்கள் பதிவுகூட செய்வதில்லை. நாட்டின் விவசாயக் கொள்கை, விவசாயிகளை கடும் நெருக்கடிக்கு தள்ளி, மீளமுடியாத நிலையில் தற்கொலைக்கு தூண்டுகிறது' என்று கூறினார்.

English summary
Madhya Pradesh government gives a shocking reason for the Farmers Suicide incidents in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X