For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றாலம் அருவியில் குளிக்கிறவங்களுக்கும் ஹெல்மெட்டை கட்டாயமாக்குங்கப்பா ப்ளீஜ்!

Google Oneindia Tamil News

தென்காசி: குற்றாலம் அருவியில் குளித்தபோது, கல் விழுந்து வாலிபர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலம் வனப்பகுதியில் மழை இல்லாததால் கடந்த சில வாரங்களாக அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்துள்ளது. அப்படியிருந்தும் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை இன்று காலை லேசான சாரல் மழை தூவியது.

Man injured when he took bath in Courtallam falls

காலை 9.30 மணியளவில் மெயின் அருவியில் எராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுரையை சார்ந்த பாலகிருஷ்ணன் என்ற சுற்றுலா பயணி மீது அருவியின் மேல் பகுதியிலிருந்து உருண்டு வந்த ஒரு கல் எதிர்பாராத விதம் இவரது தலையில் விழுந்தது.

இதில் மண்டை உடைந்தது ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு அவசர மருத்துவ சேவைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏதேது.. குற்றாலத்தில் குளிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் அப்படீன்னு ரூல்ஸ் போடனும்போல இருக்குதே..

English summary
Man injured when he took bath in Courtallam falls as a stone hit his head.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X